ரூ.4.79 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்த யோகி அரசு

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 01:13 pm
rs-4-75-lakh-crore-budget-presented-in-up-assembly-by-yogi-govt

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ரூ.4.79 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால் அதை தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்: 

கிராமப்புறங்களில் கோசாலைகளை அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகர்ப்புறங்களில் கைவிடப்பட்ட மாடுகளை பராமரிக்கும் வகையில் கோசாலை அமைப்பதற்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது. பெண்களுகான மருத்துவம் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீட்டில் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. 

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.1,298 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறையை நவீனப்படுத்த ரூ.204 கோடி செலவிடப்படும் என்றும் யோகி அரசு அறிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close