ராபர்ட் வதேராவை வெச்சு செய்யும் அமலாக்கத் துறை!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 01:37 pm
robert-vadra-summoned-again-by-ed-for-questioning

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராபர்ட் வதேரா லண்டனில் வாங்கியதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கின் விசாரணைக்காக  முதல்முறையாக வதேரா, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.அவரை, அவரது மனைவியும் ,உத்தரப் பிரதேச மாநில (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா, தமது காரில் அமலாக்கத் துறை அலுவலகம் அழைத்து வந்து விட்டுச் சென்றார்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் 3 பேர் கொண்டக் குழு அவரிடம் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது,
லண்டனில் சொத்துக்கள் வாங்கப்பட்டது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளி்ட்டவை குறித்து  வதேராவிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை  மேற்கொண்டனர்.

ஆனால், "லண்டனில் தமக்கு எந்த  சொத்தும் இல்லை" என்று வதேரா கூறியதாக தெரிகிறது.

அவரது பதிலில் திருப்தியடையாத அமலாக்கத் துறை அதிகாரிகள், இன்று காலை 10:30 மணி முதல் வதேராவிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை விவரங்களை ஆடியோ பதிவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி: தலைமறைவாக இருக்கும் ஆயுத விற்பனையாளரான சஞ்சய் பண்டாரி என்பவர், லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கம் பகுதியில் தமக்கு சொந்தமாக உள்ள அசையா சொத்துகளை வாங்கி விலைக்கே விற்றுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்தச் சொத்துகளின் விற்பனை தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. 

அதில் காங்கிரஸ்  மூத்தத் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலாட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் பணியாளரும், வதேராவின் உதவியாளருமான மனோஜ் அரோராவுக்கும், சஞ்சய் பண்டாரிக்கும் இடையே மின்னஞ்சலில் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, லண்டனில் உள்ள சொத்துகளின் உண்மையான உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. அதன் பெயரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்றொரு வழக்கில்...இதனிடையே, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக ராபர்ட் வதேரா,  வரும் 12-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close