சத்தீஸ்கரில் என்கவுண்டர்: 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 03:09 pm
chhatisgarh-10-maoists-neutralised-in-encounter-with-stf-drg-in-bijapur-11-weapons-recovered

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 10 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் ஊடுருவி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று சத்தீஸ்கர் பீஜப்பூரில் பாதுகாப்புப்படையினருக்கும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது.

சிறப்புப்படைப்பிரிவு மற்றும் மாவட்ட பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய இந்த தாக்குதல் பைரம்கார்க் காவல் நிலையம் அருகே நடைபெற்றது. வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட 11 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close