சத்தீஸ்கரில் 10 மாவாேயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 02:43 pm
10-maoists-neutralised-in-chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில போலீசார் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கரின், பீஜப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை, மாவோயிஸ்ட் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், பீஜப்பூரில், துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த முக்கிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close