கதறும் கன்னியாஸ்திரிகள்: கண்டுகொள்ளுமா கேரள அரசு?

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 06:31 pm
nun-rape-case-ncw-chairperson-writes-letter-to-kerala-cm

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி, பிஷப் பிரான்கோவால் பலாத்காரம் செய்யப்பட்டதாக பதிவான வழக்கில், பிரான்கோ கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அவர் மீது, மேலும் சில கன்னியாஸ்திரிகள் பாலியல் புகார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், அவர் ஜாமினில் வெளிவந்த போது, அவரது ஆதரவாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட, பலரும் தடபுடல் வரவேற்பு அளித்தனர். 

இது, அதிகாரிகள், அரசியல் வட்டாரத்தில் பிரான்கோவின் தனிப்பட்ட செல்வாக்கை வெளிச்சமிட்டு  காட்டியது. 

இந்நிலையில், பிரான்கோ, சிறையிலிருந்து வெளிவந்த சில தினங்களிலேயே, பிரான்கோவுக்கு எதிராக குற்றம்சாட்டிய கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாதிரியார் குரியாகோஸ் மர்ம முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரான்கோ மீது புகார் அளித்த கன்னியாஸ்திரிகள், ஒரே இடத்தில் பணி புரிய, அந்த திருச்சபை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை, வெவ்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம், தங்களை பிரித்து, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி, கொலை மிரட்டல் விடுப்பதுடன், பிரான்கோவுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க முயல்வதாகவும், கன்னியாஸ்திரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கூறி, தேசிய மகளிர் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த மாநில முதல்வர் பிணராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு, சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த வழக்கை விரைந்து விசாரிக்கும் படியும், பிஷப் மீது குற்றம்சாட்டியுள்ள கன்னியாஸ்திரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், தேசிய மகளிர் ஆணையம், முதல்வர் பிணராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

‛‛இதன் பிறகாவது, மரண பயத்தில் இருக்கும் கன்னியாஸ்திரிகளுக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு வழங்குமா? ஜாமினில் வெளியாகி, சுதந்திரமாக சுற்றித்திரியும் பிஷப் பிரான்கோவுக்கு எதிரான வழக்கு வேகமெடுக்குமா?’’ என, எதிர்பார்த்து காத்திருப்பதாக, கன்னியாஸ்திரிகளின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close