மக்கள் சொத்தை காங்கிரஸ் கொள்ளையிட்டது: மோடி பகிரங்க குற்றச்சாட்டு !

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 08:30 am
pm-modi-s-strong-attack-on-congress

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் மக்கள் சொத்தை கொள்ளையடித்துள்ளதாக, பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், எங்கள் அரசு ஏழைகளுக்கானது. நாங்கள் ஆட்சி செய்ய தொடங்கியது முதல் இன்று வரை எவ்வித ஊழலும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊழல் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பெற்று வருகிறோம் என பேசினார். 

மேலும், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 356வது சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், நாங்கள், ஒருபோதும் அதனை தவறாக யன்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார். 

காங்கிரஸ் ஆட்சி நடத்தியது முழுக்க முழுக்க வியாபார நோக்கிலும், லாப நோக்கிலும் தான் இருந்தது என குற்றஞ்சாட்டிய மோடி, மெகா கூட்டணி என்ற பெயரில் பல ஊழல்வாதிகளை கொண்ட கூட்டாஞ்சோறு செய்து வருகிறது காங்கிரஸ் என சுட்டிக் காட்டினார். 

காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டதை பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அவர்,  காமன் வெல்த், 2ஜி ஊழல் என நாடு சுரண்டப்பட்டது. நாட்டை கொள்ளை அடிக்க திருடர்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் பாருங்கள். கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை நாங்கள் மீட்டு வருகிறோம். இன்னும் வரக்கூடிய சவால்களை நாங்கள் எதிர்கொள்வோம் எனவும் மோடி பேசினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close