காங்கிரசின் 55 ஆண்டு கால ஆட்சி... பாஜகவின் 55 மாத ஆட்சி... ஒப்பிட்ட மோடி!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 09:10 am
55-yrs-congress-govt-55-months-bjp-govt-compared-by-modi

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான 55 ஆண்டுகால ஆட்சியையும், பாஜக தலைமையிலான 55 மாத கால ஆட்சியையும் ஒப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி  நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி வைத்து, குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவரது உரைக்கு  நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 55 மாத ஆட்சியில் நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களையும், காங்கிரஸ் தலைமையிலான 55 ஆண்டுகால ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களையும் ஒப்பிட்டு அவர் பேசியது:

நாட்டில் தூய்மை. சுகாதாரப் பணிகள் 2014-ஆம் ஆண்டு வரை 40 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால், கடந்த 4.5 ஆண்டுகளில் சுகாதாரப் பணிகள் 98 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 

கடந்த 55 ஆண்டுகளில் மொத்தமே 12 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால், கடந்த 55 மாதங்களில் மட்டும் புதிதாக 13 கோடி எரிவாயு இணைப்புகளை மத்திய பாஜக அரசு அளித்துள்ளது.

இதேபோன்று, காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 55 ஆண்டுகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த 4.5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

2004, 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களின்போது, ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் தமது தேர்தல் அறிக்கையில், "அடுத்த மூன்றாண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளும் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்" என்று குறிப்பிட்டிருந்தது. 

இதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்தப் பணியையும் எனது தலைமையிலான பாஜக அரசுதான்  வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது என மோடி பட்டியலிட்டு பேசினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close