ஹெல்மெட் போடாத போலீஸ்: தட்டிக் கேட்ட இளைஞர் கைது

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 03:06 pm
man-who-questions-a-police-arrested-in-mumbai

மும்பையில், ஹெல்மெட் போடாமல், இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற போலீசை நிறுத்தி, விதியை மீறியது ஏன் என கேள்வி கேட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சாலையில் வேகமாக பைக் ஓட்டி சென்றார். ஆனால், அவர் தலையில், ஹெல்மெட் அணியவில்லை. இதை பார்த்த, அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் நண்பர்களுடன் அவரை விரட்டி சென்றார். 

அவரை வழிமறித்து நிறுத்தி, ‛‛நீங்கள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் செல்வது சட்டத்தை மீறும் செயல். உங்களிடம் அபராதம் வசூலிப்பது யார்? போலீஸ்காரரே இப்படி விதி மீறி செயல்படலாமா?’’ என கேள்விகேட்டுள்ளார். அத்துடன், போலீசார் செய்வது போலவே, அவரது பைக் சாவியை, அத்துமீறி எடுத்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த போலீஸ்காரர், தன்னிடம் கேள்வி கேட்ட இளைஞர் மீது, ‛அரசு ஊழயரை பணி செய்ய விடாமல் தடுத்தல், போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்தல்’ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளார். 

அந்த நபரின் நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். போலீஸ்காரரின் இந்த செயல், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close