ஸ்மார்ட் போனை ஹேக் செய்து ரூ.60 ஆயிரம் திருட்டு!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 04:06 pm
man-clicks-on-link-in-phone-loses-rs-60-000

வருமான வரித்துறை பெயரில் வந்த ‛லிங்க்’கை கிளிக் செய்த, நபரின் ஸ்மார்ட் போனில், தானாவே இன்ஸ்டால் ஆன ‛ஆப்’ மூலம், அவரது வங்கி கணக்கிலிருந்து, 60 ஆயிரம் ரூபாயை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டெல்லி அருகே உள்ள குருகிராமை சேர்ந்தவர், ஹரிஸ் சந்தர், 52. வருமான வரித்துறை பெயரில் இவரது மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது.

அதில், ‛தங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. 

இதையடுத்து, அந்த விபரங்களை அறிய, அவர் அந்த ‛லிங்க்’கை கிளிக் செய்தார். உடனே, அவரது ஸ்மார்ட் போனில், தானாகவே ஒரு ஆப் டவுன்லோடு ஆனது. அவரும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 

சில நிமிடங்களில், அவரது மாெபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அது, அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான ஓ.டி.பி., என்பதை அறிந்து அவர் பதறினார். 

அடுத்த சில நொடிகளில், அவரது வங்கி கணக்கிலிருந்து, 60 ஆயிரம் ரூபாய் டெபிட் செய்யப்பட்டதாக வங்கியிலிருந்து எஸ்.எம்.எஸ்., வந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஸ், உடனே வங்கிக் கிளையை அணுகி, இது குறித்து புகார் அளித்தார். வங்கி அதிகாரிகள் சாேதனையிட்டதில், ஹரிஸின் ஸ்மார்ட் போன் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்தது. 

இதையடுத்து, ஹரிஸ், போலீசில் புகார் அளித்தார். போலியான ‛லிங்க்’கை அனுப்பி, அதன் மூலம், ஹரிஸின் மாெபைலை ஹேக் செய்து பணம் திருடிய கும்பல், மஹாராஷ்டிரா மாநிலம் புணேயிலிந்து செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, குருகிராம் போலீசார், புணே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close