4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை: சித்தராமையா

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 06:58 pm
action-against-4-congress-mlas-siddaramaiah

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக்கு வராத நான்கு எம்எல்ஏக்கள் மீது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும், என கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் தொடர்ந்து கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அம்மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் இருந்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

தங்களது எம்.எல்.ஏ.க்கள் பலத்தை காட்ட, காங்கிரஸ் கட்சி கடந்த ஜனவரி மாதம் நடத்திய சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், ரமேஷ் ஜர்க்கிஹோலி, நாகேந்திரா, மகேஷ் குமதலி, உமேஷ் ஜாதவ் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள், அந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படாததால், அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒத்துழைக்க மறுத்துவந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து கட்சி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரும் அவர்கள், இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பிற்கும் வரவில்லை. எனவே, அவர்கள் நால்வர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சபாநாயகரை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close