'ரஃபேல்' என்ற செத்த பாம்பை காங்கிரஸ் அடித்துக் கொண்டிருக்கிறது - நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 09:15 pm
congress-is-flogging-a-dead-horse-nirmala-sitharaman

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பாதுகாப்புத்துறையின் பேச்சுவார்த்தையில் குறுக்கிட்டதாக எழுந்துள்ள புதிய சர்ச்சையை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி செத்த பாம்பை அடித்து கொண்டிருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை நடத்தி வந்த பேச்சுவார்த்தையை மீறி, பிரதமர் அலுவலகம் தனி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்புத்துறையில் இருந்து ஒரு அறிக்கை வெளியானதாகவும் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஏற்கனவே ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் வெளியிட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற கமிட்டி ஒன்றை உருவாக்கி, இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சி செத்த பாம்பை அடித்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுபோன்ற ஒப்பந்தங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவது சகஜமான விஷயம் தான், என்று நிர்மலா சீதாராமன் கூறினார். "அந்த ஊடகம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து வெளியான அறிக்கையை மட்டுமே பதிவிட்டு உள்ளது. ஆனால், அதற்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கொடுத்த பதிலை பதிவிடவில்லை. அது எப்படி சரியான ஊடக நெறிமுறையாகும்," என கேள்வி எழுப்பினார். பிரதமர் அலுவலகம் ரஃபேல் விவகாரத்தில் குறுக்கிடுவதாக எழுந்த அறிக்கையை தொடர்ந்து, குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரியிடம், அமைச்சர் பாரிக்கர், "எல்லாமே சரியாக தான் நடந்து வருகிறது" என பதிலளித்து இருந்ததாக நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close