கருப்பு கொடிகளை தாண்டி  வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார் பிரதமர் மோடி

  Newstm News Desk   | Last Modified : 09 Feb, 2019 11:05 am

pm-modi-braves-black-flags-protests-to-launch-key-projects-in-northeast

5 நாட்களில் 10 மாநிலங்களுக்கு பயணம் செய்ய உள்ள பிரதமர் மோடி அதன் ஒரு பகுதியாக நேற்று கவுகாத்திக்கு சென்ற போது அவருக்கு பலரும் கருப்புக் கொடி காட்டினர். 

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில் பிரதமர் மோடி தொடர்ந்து பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக தற்போது அவர் அசாம், அருணாச்சல் பிரதேசம், திருப்புராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள ஹொளாங்கி பகுதியில் விமான நிலையம் கட்ட அடிக்கல் நாட்டுவது, கவுகாதியில் 6 வழி பாலம், சான்ங்சாரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டுவது உட்பட நலத்திட்டங்களை அவர் அங்கு துவங்கி வைக்கிறார். 

இந்நிலையில் பிரதமர் மோடி கவுகாதி சென்ற போது அசாம் மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தியதோடு கருப்புக் கொடி காட்டினர். விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் சென்ற மோடிக்கு அவர்கள் கருப்பு கொடி காட்டினர். முன்னதாக வடக்கிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close