கோல்கட்டா போலீஸ் கமிஷனரிடம் இன்று சி.பி.ஐ., விசாரணை

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 11:14 am
kolkata-police-commissioner-rajeev-kumar-to-be-questioned-in-shillong-today

சாரதா சிட்பண்டு ஊழல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை அழித்ததாக, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் அவரிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மிக பிரபலமாக இயங்கி வந்த சாரதா சிட்பண்டு நிதி நிறுவுனம், மக்கள் பணம், 30 ஆயிரயம் கோடி ரூபாய்க்கு மேல் மாேசடி செய்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில், அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் திட்டமிட்டு அழித்துவிட்டதாக, புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க சென்ற போது, அந்த அதிகாரிகளை போலீசார் சிறைபிடித்தனர். 

ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், சி.பி.ஐ., முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நடத்து அதிகாரிகளுக்கு எவ்வித பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதால், மேகலாயா மாநிலம் ஷில்லாங்கில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ., முன் இன்று ஆஜராகும் ராஜீவ் குமாரிடம், இரண்டு வெவ்வேறு இடங்களில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணைக்குப் பின், இந்தவழக்கில், பல அதிரடி திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close