பீர் விலை ஏற்றம்: முதல்வர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 11:35 am
beer-price-will-be-increase-cm

பீர் உற்பத்தி மீதான கலால் வரி உயர்த்தப்படுவதாக, நேற்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். இதனால், கர்நாடகாவில், ஏப்., 1 முதல் பீர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கர்நாடக மாநில சட்டசபையில், அந்த மாநில முதல்வர் குமாரசாமி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பீர் உற்பத்திக்கு தற்போது விதிக்கப்படும் கலால் வரி, இரு மடங்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

இந்த புதிய வரி விதிப்பு முறை, ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதால், ஏப்ரல் மாதம் முதல், கர்நாடகாவில், பீர் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுப் பிரியர்கள், கோடை காலங்களில், விஸ்கி, பிராந்தி உள்ளிட்டவற்றை குடிப்பதை விட, பீர் குடிக்கவே அதிகம் விரும்புவர். இந்நிலையில், கடும் கோடை சுட்டெரிக்கும் ஏப்ரல் முதல், பீர் விலை உயரும் என்ற செய்தி, கர்நாடக மாநில ‛குடி’ மகன்களுக்கு கசப்பான ஒன்றாக இருக்கும் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close