ராபர்ட் வதேரா 3வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 02:03 pm
robert-vadra-appears-before-ed-for-third-time-in-money-laundering-case-probe

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று 3வது நாளாக ராபர் வதேரா விசாரணைக்கு ஆஜரானார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், இன்று 3-வது முறையாக ராபர்ட் வதேரா மத்திய டெல்லியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close