கள்ளச் சாராயம் குடித்த 44 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 03:13 pm
44-dead-in-uttar-pradesh-in-4-days-after-having-adulterated-liquor

உத்தர பிரதேசத்தில் கள்ளச் சாராயம் குடித்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 44 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிமல் குஷிநகரில், வெளியூரை சேர்ந்த நபர், தன்னை ஒரு சாராய வியாபாரி எனக் கூறி, பாக்கெட் சாரயத்தை வினியோகம் செய்துள்ளார். இலவசமாக கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் அதை வாங்கி குடித்த, 12 பேர், உடல் நலம் பாதிக்கப்பட்ட அன்று இரவே இறந்தனர்.

மேலும் பலர், அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், பலர் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில், 44 பேர் பலியாகியுள்ளனர். 

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close