டெல்லியில் போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு முடிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 03:25 pm
naidu-to-hold-protest-in-delhi-on-feb-11-two-trains-hired

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 11-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் ஒருநாள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளார். 

இதற்காக, 20 பெட்டிகளுடன் கூடிய 2 ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவை 10-ஆம் தேதி கிளம்பும் ரயில்கள் மூலம் பயணித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்று ஆந்திர அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close