ரஃபேல் ஒப்பந்தம் பற்றி ராகுல் காந்தியின் 10 பொய்கள்: பாஜக தாக்கு

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 04:38 pm
bjp-lists-10-lies-by-rahul-gandhi-on-rafale-deal

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் குறித்து நாட்டு மக்களிடம் 10 பொய்கள் கூறியுள்ளதாகவும், அவருக்கு பொய்க்கான நோபல் பரிசு வழங்க வேண்டும், என்றும் பாஜக தெரிவித்துள்ளது. 

ரஃபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு பெரும் ஊழல் செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு ஊடகத்தில் வெளியான செய்தியில், ரஃபேல் தொடர்பாக பாதுகாப்புத்துறை நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் குறுக்கிட்டதாக என். ராம் தி ஹிந்து நாளிதழில் செய்தி வெளியிட்டார்.

அந்த செய்தியை அடிப்படையாக வைத்து, அந்த செய்தியின் நகலை, பத்திரிகையாளர்கள் மத்தியில் எடுத்து ஆட்டிக்காட்டி மத்திய அரசு மோசடி செய்துள்ளதாகவும், இதுதுறித்து தீர விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

அவர் அவ்வாறு பேசிய சில நிமிடங்களில் ஹிந்து நாளிதழில் குறிப்பிடப்பட அமைச்சக விவாதக்குறிப்பு வெட்டி ஒட்டி வெளியிடப்பட்டது. அதில் கூறியிருந்த மேலும் பல தகவல்களை வெட்டி விட்டு, செய்தி வெளியிட்டு உள்ளனர் என்று சம்பத்தப்பட்ட அதிகாரியான  அப்போதைய பாதுகாப்பு செயலராக பதவி வகித்து வந்த மோகன் குமார் செய்தி வெளியிட்டு ஹிந்து பத்திரிகை என்.ராம் மற்றும் ராகுலை சந்தி சிரிக்க வைத்தார். 

இந்நிலையில், ரஃபேல் தொடர்பாக ராகுல் காந்தி 10 பொய்கள் கூறியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது. 

1. ரஃபேல் உதிரி பாகங்களுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என டஸால்ட் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியதாக ராகுல் காந்தி கூறியது;

2. ரஃபேல் ஒப்பந்தத்தில் உச்ச நீதிமன்றம் பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்ததாக கூறியது;

3. ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் குறுக்கிட்டதை விமர்சித்த பாதுகாப்புத்துறை அதிகாரியை தண்டித்ததாக கூறியது;

4. முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலாண்டே, பிரதமர் மோடியை 'திருடன்' என விமர்சித்ததாக கூறியது;

5. ரஃபேல் குறித்த தகவலைகளை வெளியிட ரகசிய காப்புரிமை ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சொன்னதாக ராகுல் கூறியது;

6. ரஃபேல் ஒப்பந்தத்தில் ரூ.520 கோடிக்கு போர்விமானம் பெறுவதாக கூறிய ராகுல், கர்நாடகாவில் 526 கோடி, ராஜஸ்தானில் 540 கோடி, டெல்லியில் 700 கோடி என மாற்றி மாற்றி கூறியுள்ளார்;

7. ரஃபேல் தொடர்பாக ராணுவ விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மீறி மத்திய அரசு செயல்பட்டதாக கூறியது;

8. ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் போட்டதாகவும், பாரதிய ஜனதா ரூ.1600 கோடி ரூபாய்க்கு அதை உயர்த்தியதாகவும் ராகுல் கூறியது;

9. ரஃபேல் ஒப்பந்தத்தால் இந்திய விமானப்படைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியது;

10. ராகுலும் அவரது கூட்டு சதிக்காரர்களுமான 'தி இந்து' செய்தி நிறுவனமும், பாதுகாப்புத்துறையின் முழு ஆவணத்தையும் பதிவு செய்யாமல், அதில் பாதியை மட்டும் வெளியிட்டு பொய் சொன்னது.

என பாரதிய ஜனதாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close