ஐதராபாத்- உணவு வகைகளை பறிமாறும் ரோபோக்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 04:50 pm
robots-serve-food-at-this-hyderabad-restaurant

ஐதராபாத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் வகையில் ரோபோ கிச்சன் எனும் பெயரில் ஹோட்டல் ஒன்று ரோபோக்களை கொண்டு செயல்படுகின்றது. 

ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ரோபோ கிச்சன் எனும் ஹோட்டல் உள்ளது. இங்கு உணவு பரிமாற ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான மெனு கார்டுக்கு பதிலாக டேப் ஒன்று கொடுக்கப்படும். 

அதில் உணவு வகைகள் மெனு போல் இருக்கும். அதில் தேவையான உணவை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இந்த ஆர்டர் நடமாடும் ரோபோ மூலம்  கிச்சனுக்கு  கொண்டு செல்லப்படும். கிச்சனில் இருந்து உணவு தயாரானதும் அவைகளை இந்த ரோபோக்களே பரிமாறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஹோட்டலில் தற்போது 4 ரோபோக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகின்றது. இவற்றிற்கு அழகிய சேவை ரோபோக்கள் என பெயரிடப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close