நோயாளியின் வயிற்றுக்குள் கத்திரிக்கோல்- ஐதராபாத் மருத்துவர்களின் அலட்சியம்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 04:56 pm
at-hyderabad-hospital-doctor-leaves-scissors-in-patient-s-stomach

ஐதராபாத்தில் அறுவை சிகிச்சையின் போது  நோயாளியின் வயிற்றுக்குள் கத்திரிக்கோலை மறந்துபோய் வைத்து தைத்துவிட்ட மருத்துவர்களின் அலட்சியம் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது எக்ஸ்ரே மூலம் அம்பலமாகியுள்ளது.

ஐதராபாத்தில் புகழ்பெற்ற நிசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாதங்களுக்கு முன் 33 வயது பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின் வீடு திரும்பிய அவருக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியான வயிற்று வலி இருந்து வந்தது. இதைப் பரிசோதிப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது, அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், மருத்துவ அறுவை சிகிச்சை உபகரணமான கத்திரிக்கோல் போன்ற இடுக்கி ஒன்று உள்ளே இருந்ததை அறிந்த அதே மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக  மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதை அப்புறப்படுத்தினர். நோயாளியின் வயிற்றுக்குள் அதை வைத்துவிட்டு மறந்து தையல் போட்ட அலட்சிய மருத்துவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close