ரூ.10 கோடிக்கு எம்.எல்.ஏக்களை பேரம் பேசும் பாஜக: காங்கிரஸ் ஷாக்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 05:56 pm
bjp-horse-trading-mlas-for-rs-10-crores-congress

மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணியில் கர்நாடகாவில் நடைபெற்றுவரும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.10 கோடி ரூபாய் கொடுத்து வாங்க பாரதிய ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில், குமாரசாமி ஆட்சி நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஏற்கனவே பதவி கிடைக்காததால், கட்சித் தலைமையுடன் முட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், தங்களது எம்எல்ஏக்களை பாதுகாக்க இரு கட்சிகளும் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரதிய ஜனதா தரப்பிலிருந்து ரூ.10 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் எம்எல்ஏக்களை பேரம் பேசி வருவதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாக கூறி, அதற்கு ஆதாரமாக 2 ஆடியோ பதிவுகளை வெளியிட்டார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கே.சி வேணுகோபால், பாரதிய ஜனதா கட்சி ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.10 கோடி கொடுப்பதாகவும், அமைச்சரவையில் இடம் கொடுப்பதாகவும் கூறி, பேரம் பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்களை தகுதி நீக்கம் செய்யமால் இருக்க, சபாநாயகருக்கு ரூ.50 கோடி விலை பேசியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். நேற்று வெளியான ஆடியோ பதிவுகளில், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவின் பெயரும் அடிபட்டதாக வேணுகோபால் கூறியுள்ளார். 

ஆடியோ பதிவுகளை பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார், அதில் இருப்பது முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் குரல் போல தெரியவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றம் கூடும்போது, இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சபாநாயகரின் அறிக்கையை குறிப்பிட்டு, இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என பாரதிய ஜனதா கூறியுள்ள நிலையில், "குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகத் தயார்," என எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close