சிகிச்‌சைக்கு பின் அருண் ஜெட்லி நாடு திரும்புகிறார்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 05:54 pm
arun-jaitley-returns-to-india-after-treatment-in-us

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நியூயார்க்கிலிருந்து இந்தியா திரும்புகிறார்.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, ஜெட்லியிடமிருந்த நிதித்துறை, அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல்நிலை சரியானதும் மீண்டும் நிதித்துறை பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி இரவு மருத்துவ பரிசோதனைக்காக அருண் ஜெட்லி திடீரென அமெரிக்காவின் நியூயார்க் சென்றார். பரிசோதனைகள் முடிந்து அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எனவே நிதித்துறை, பியூஷ் கோயலிடம் மீண்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம், அருண் ஜெட்லி, ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், தாயகம் திரும்புவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close