உத்தரப்பிரதசேத்தில் நடமாடும் பள்ளிக்கூடம் தொடக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 09 Feb, 2019 06:20 pm
yogi-adityanath-inaugurates-computerized-mobile-bus-classroom

உத்தர பிரதேசத்தில் தொலைத்தூரங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடமாடும் பள்ளியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத், படிக்காமல் வேலை பார்ப்பவர்களுக்கு கல்வி கிடைக்கச் செய்வதற்காக நடமாடும் பள்ளிக்கூடம் அமைத்து தர வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

இதன் விளைவாக, உத்தரப்பிரதேசத்துக்கு முற்றிலும் கணிணிமயமான பேருந்து ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. 
இந்த பேருந்து கணிணி வகுப்பறையில் 3டி பிரிண்டர்கள், மொபைல் டிவைசுகள், இணைய வசதி, டிஜிட்டல் பிளாக் போர்டு என மிகுந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த பேருந்து வாரணாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி மற்றும் கணிணி கல்வி சேவையை வழங்கவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close