இந்துத்துவ தலைவரை பற்றி அவதூறு பேச்சு: ராகுல் மீது புகார்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 07:14 pm
police-complaint-filed-against-rahul-gandhi-for-insulting-veer-savarkar

இந்துத்துவ தலைவர் வீர் சாவர்கரை பற்றி அவதூறு பரப்பியதாகவும், அவரை பற்றி இழிவாக பேசியதாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துத்துவ தலைவர் வீர் சாவர்கரை பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. சாவர்கரை ஒரு கோழை என்று ராகுல் விமர்சித்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் சாவர்கரை பற்றி ராகுல் காந்தி இதுபோல பேசியதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

1911ம் ஆண்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், ஆங்கிலேயர்களிடம் தன்னை விடுவித்து விடுமாறு வீர் சாவர்கர் கெஞ்சியதாக ராகுல்காந்தி விமர்சித்திருந்தார். மேலும் பல அவதூறான வார்த்தைகளால் அவரை ராகுல்காந்தி திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வீர் சாவர்கரின் குடும்பத்தை சேர்ந்த, ராஜ்னீத் சாவர்கர், மும்பை காவல் நிலையத்தில் ராகுல் காந்தி மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது "டெல்லியில் ஒரு பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியபோது சாவர்கர் அந்தமான் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்காக ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார். அது தவறு. சாவர்கரை ஆங்கிலேயர்கள்  27 ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்தனர். இதனால், அவரைப்பற்றி அவதூறு கிளப்பியதாக ராகுல்காந்தி மீது புகார் அளித்துள்ளேன்" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close