காசியில் ரூ.2000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 08:48 pm
modi-to-inaugurate-rs-2000-crores-worth-projects-in-kasi

பிரதமர் நரேந்திர மோடி, தனது வாரணாசி தொகுதியில் உள்ள புனித தலமான காசியில், ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை வரும் 19ம் தேதி துவக்கி வைக்கிறார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று காசியில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள பல்வேறு திட்டங்களை பார்வையிட்டார். காசி விஸ்வநாதர் சாலை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் மருத்துவமனை, நகர் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி அங்கு திறந்து வைக்கிறார். இதற்காக வரும் 19ம் தேதி, வாரணாசிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக திறக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்தத் திட்டங்களால் காசி சர்வதேச அளவில் ஒரு மருத்துவ மையமாக அமையும். உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், நேபால் ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 கோடி மக்கள் இந்த புதிய திட்டங்களால் பயன்பெறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு புற்றுநோய் மருத்துவமனை திட்டங்களும், அதிநவீன மருத்துவமனைகளையும் உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close