விரைவில் பல காங்கிரஸ் கட்சியினர் சிறை செல்வார்கள்: சுப்பிரமணியன் சுவாமி

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 09:48 pm
many-congressman-will-be-sent-to-jail-soon-subramanian-swamy

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு முன் பல காங்கிரஸ் கட்சியினர் சிறை செல்வார்கள் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனது சொந்த முயற்சியால் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பலர் தற்போது பெயில் பெற்று வெளியே இருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய சுப்பிரமணிய சுவாமி, தான் தொடுத்த ஏர்செல்- மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரமும் தற்போது சிக்கி உள்ளதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நீதி மிக வேகமாக கிடைத்து வருவதாகவும், ஊழல்வாதிகளை மிக வேகமாக தண்டிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"எல்லாம் வேகமாக நடந்து வருகிறது. அது தேர்தல் வருவதால் மட்டுமல்ல. விரைவில், வரும் வாரங்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் சிறைக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது, என்று கூறினார். மேலும், பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் எளிதாக வென்று விட முடியுமா என்று கேட்டதற்கு, வளர்ச்சித் திட்டங்கள் மட்டும் தேர்தலில் வெற்றியை கொடுத்து விடாது. பிரதமர் நரசிம்மராவ், நாட்டில் மிகப்பெரிய பொருளாதார ஆச்சரியங்களை ஏற்படுத்தினார். ஆனால், மிக மோசமான தோல்வி அடைந்தார். இதேபோல், தனது திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்ததாக நினைத்து வாஜ்பாய், தேர்தலை பல மாதங்கள் முன்கூட்டியே நடத்தினார். ஆனால் அப்போதும் படுதோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. இந்திய சரித்திரத்திலேயே நிலையான ஒரு பொருளாதாரம் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்தது. ஆனால் ஜனதா கட்சி பத்தில் ஒரு பங்கு பலம் குறைந்தது தோல்வியடைந்தது. இந்திய சரித்திரத்திலேயே பொருளாதார முன்னேற்றம் மட்டும் தேர்தல் வெற்றிக் வெற்றியாக மாறியது இல்லை. வெற்றிக்கு ஒரு உணர்ச்சிகரமான விஷயம் வேண்டும். பாரதிய ஜனதாவுக்கு இரண்டு உள்ளன. ஒன்று இந்துத்துவா; மற்றொன்று ஊழல் ஒழிப்பு. மீண்டும் ஆட்சி அமைத்து வருவோம்" என்று கூறினார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close