கொல்கத்தா காவல் ஆணையரிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 09:59 pm
cbi-questions-kolkata-police-chief-rajeev-kumar-for-9-hours

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் இன்று ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரைவிசாரிக்க சிபிஐ முயன்ற நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதை தடுத்து, சர்ச்சையை கிளப்பினார். இதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கைது செய்யக் கூடாது என்றும், அவர் தானாக சிபிஐ முன் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

 இந்நிலையில் இன்று காலை ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ்குமார் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் கேள்வி கேட்டதாக தெரிகிறது. நாளையும் ராஜ்குமாரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படும் என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி குனல் கோஷும் நாளை ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close