மோடி அருணாசலப் பிரதேசம் செல்ல சீனா எதிர்ப்பு – இந்தியா கடும் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 11:03 pm
china-objects-pm-modi-visit-to-arunachal-pradesh-and-mea-replied-to-it

பிரதமர் நரேந்திர மோடி அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு செல்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது தங்களுடைய பகுதி என்ற வழக்கமான பல்லவியை பாடியிருக்கிறது அந்நாட்டு அரசு. அதற்கு இந்திய அரசு மீண்டும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

நாட்டின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள், அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை சீனா வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்நிலையில், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங், இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ”இந்திய – சீன எல்லையில் உள்ள கிழக்குப் பகுதிக்கு இந்திய தலைவர்கள் செல்வதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்திய – சீன எல்லையை பொருத்தவரையில் எங்களின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது. அருணாசலப் பிரதேசம் என்று அழைக்கப்படும் அப்பகுதியை சீன அரசு ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடியாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை மாற்றியமைக்க இயலாது. நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதைப் போலத்தான் அருணாசலப் பிரதேசத்துக்கும் இந்திய தலைவர்கள் அவ்வபோது சென்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close