ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை – உச்சகட்ட பதற்றம்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 11:02 pm
tmc-mla-shot-dead-in-west-bengal

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சதியஜித் பிஸ்வாஸ் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலையால், உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சில சமூக விரோதிகளால் சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்தக் கொலையின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பா.ஜ.க. அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடியா மாவட்டம் கிருஷ்ணாகஞ்ச் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் சத்யஜித் பிஸ்வாஸ். அவர் இன்றிரவு புல்பாரி என்னும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். மேடையை விட்டு கீழே இறங்கி வந்தபோது, மிக அருகில் நின்று மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close