ஏழைகளுக்கு 4 லட்சம் வீடுகளை வழங்கினார் சந்திரபாபு நாயுடு!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 10:05 am
chandrababu-naidu-unveils-4-lakh-houses-for-poor-people

ஆந்திர மாநிலத்தை குடிசை இல்லா மாநிலமாக்க கொண்டு வரப்பட்ட என்.டி.ஆர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 4 லட்சம் புதிய வீடுகளை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஆந்திர மாநிலத்தை, குடிசை இல்லாத மாநிலமாக்க, நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 4 லட்சம் வீடுகளை, அவர் நேற்று திறந்து வைத்தார். நெல்லூரில், என்டிஆர் வீட்டுமனை திட்டத்தின்படி 356 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 4,800 வீடுகளை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 4 லட்சம் வீடுகளை, அம்மாநில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தங்களது தொகுதிகளில் திறந்து வைத்தனர்.

ஒரே நாளில் 4 லட்சம் வீடுகளை பொதுமக்களுக்கு வழங்கி, தனது அரசு சாதனை படைத்துள்ளதாக சந்திரபாபு நாயுடு பெருமிதம் கொண்டார். முன்னதாக 2018ம் ஆண்டில் ஒரே நாளில் 3 லட்சம் வீடுகளையும், 2017ம் ஆண்டில் 1 லட்சம்  வீடுகளையும் பொதுமக்களுக்கு அவரது அரசு வழங்கி இருந்தது. நாட்டின் வேறு எந்த மாநிலங்களிலும் இப்படி ஒரு சாதனை நிகழ்ந்தது இல்லை, என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும், கட்டி முடிக்கப்பட்ட அனைத்து வீடுகளுமே, பெரிய அபார்ட்மென்ட்களுக்கு இணையானதாக உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். கடந்த 4.5 ஆண்டுகளில், ஆந்திர அரசு 11 லட்சம் வீடுகளை ஏழை மக்களுக்காக கட்டியுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர அரசு, சுமார் 31,793 கோடி ரூபாய் செலவில், 15.78 லட்சம் வீடுகளை கட்ட உத்தரவிட்டிருந்தது. மேலும், முந்தைய திட்டங்களின் கீழ் நிலுவையில் இருந்த 4.4 லட்சம் வீடுகளையும் கட்டிமுடிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close