டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தால் 13 ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகியுள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்களும் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாதையில் எதிரில் வரும் வாகனங்களை தெளிவாகக் காண இயலாத காரணத்தால், ரயில் நிலையத்தில் இருந்தும் ரயில்கள் புறப்பட முடியவில்லை. இதன் காரணமாக 13 ரயில்கள் புறப்படுவதும், வந்தடைவதும் தாமதம் ஆகியுள்ளன. அதுமட்டுமின்றி சாலைப் போக்குவரத்திலும், வாகனங்கள் விரைந்து செல்ல இயலாமல் தாமதம் நிலவி வருகிறது
newstm.in