‛கேர்ள் பிரண்ட்’ பிரச்னை: 14 வயது சிறுவன் அடித்து கொலை

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 11:50 am
14-year-old-boy-stabbed-to-death-by-4-teens-for-a-girl-friend

டெல்லியில், 14 வயது சிறுவர்களிடையே எழுந்த, ‛கேர்ள் பிரண்ட்’ பிரச்னையால், நான்கு சிறுவர்கள் சேர்ந்து, மற்றொரு சிறுவனை அடித்து கொன்றனர். 

டெல்லியை சேர்ந்த, 14 வயது பள்ளி சிறுமி, தன் வீட்டருகே வசிக்கும், 14 வயது சிறுவனுடன் நெருங்கி பழகி வந்தாள். இது, அந்த சிறுமியின் ஆண் நண்பர்கள் நால்வருக்கு பிடிக்கவில்லை. 

இதனால், அந்த சிறுமியின் காதலனை அழைத்து மிரட்டல் விடுத்தனர். அந்த நால்வரில் ஒருவன், அந்த சிறுமியை ஏற்கனவே காலித்து வருதாகவும் கூறினான். 

நால்வரின் மிரட்டலையும் கண்டுகொள்ளாத அவன், தொடர்ந்து சிறுமியுடன் பழகி வந்தான். இதனால் கோபமடைந்த நண்பர்கள் நால்வரும், சிறுமியின் காதலனை தனியாக அழைத்து பேசினர்.

அப்போது, இரு தரப்பினரிடையே  வாக்குவாதம் முற்றியதில், நால்வரும் சேர்ந்து, சிறுமியின் காதலனை கடுமையாக தாக்கினர். பொதுமக்கள் ஓடி வரும் சத்தம் கேட்டு, நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்தான். அவனை தாக்கிய நால்வரில், மூன்று பேர் போலீசில் சிக்கினர்; தப்பிச் சென்ற நான்காவது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். 

பள்ளி செல்லும் வயதில், காதல் வலையில் சிக்கி, கொலை செய்யும் அளவுக்கு துணிந்த சிறுவர்களின் செயல், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close