உ.பி-யில் பரிதாபம்: கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்வு

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 12:54 pm
up-hooch-tragedy-death-toll-rises-to-97

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 215 பேரை கைது செய்துள்ளனர். 

உ.பி, உத்தரகாண்ட் பகுதிகளில் இரு தினங்களுக்கு முன் பலர் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை சரியில்லாமல் போன சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரன்பூரில் 54 பேரும், குஷிநகர் பகுதியில் 11 பேரும் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 46 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் 36 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும், சஹரன்பூர் பகுதியின் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் 32 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி மாநிலத்தை சேர்ந்தவர்கள், உத்தரகாண்ட்டின் ரூர்க்கியில் நடைபெற்ற ஓர் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர், அங்கு வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்துச் சென்றதோடு மட்டுமின்றி, மேலதிக சாராயத்தை தங்களோடு எடுத்துச் சென்று அவர்களது ஊர்களில் விற்பனை செய்ததையடுத்து மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவங்களை தொடர்ந்து, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், உத்தர பிரதேசத்தில் சுமார் 9,269 லிட்டர் கள்ளச்சாராயமும், உத்தரகாண்டில் 1,066 லிட்டர் கள்ளசாராயமும் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close