கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் இன்று 2வது நாளாக விசாரணை

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 01:07 pm
on-day-2-of-kolkata-top-cop-s-questioning-cbi-plans-a-face-off

மேற்கு வங்க மாநில மக்களிடம்  பெரும் மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம், மேகலாய மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் வைத்து இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,

முதல் நாளான நேற்று ராஜீவ் குமாரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டவது நாளாக விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். 

சிபிஐ அதிகாரிகள் இன்று காவல் ஆணையர் ராஜீவ் குமார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான குணால் கோஷ் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் விசாரித்து வருகின்றனர். இதற்காக, குணால் கோஷூம் சிபிஐ முன்பு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்னதாக நேற்று காலை, 11 மணிக்கு தொடங்கிய சிபிஐ அதிகாரிகளின் விசாரணை இரவு 7.30 வரை நீடித்துள்ளது. இதில் 3 மூத்த சிபிஐ அதிகாரிகள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. 

newstm,in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close