சொத்து வாங்கிய விவகாரம் - அமலாக்கத்துறை முன் ராபர்ட் வதேரா நாளை ஆஜர்

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 04:32 pm
robert-vadra-to-appear-before-ed-tomorrow

லண்டனில் சொத்து வாங்கியுள்ள விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேரா அமலாக்கத்துறையினர் முன் நாளை மீண்டும் ஆஜராக உள்ளார் . 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சோனியாவின் மருமகனும், பிரியங்கா வதேராவின் கணவருமான ராபர்ட் வதேரா. பிரிட்டன் தலைநகர் லண்டனில், சொத்து வாங்கிய விவகாரத்தில், சட்ட விரோத பண பரிமாற்றம் நிகழந்துள்ளதாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக,ராபர்ட் வதேராவிடம், கடந்த 6 மற்றும் 8 ஆம் தேதிகளில், டெல்லியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மூன்றாவது முறையாக வாத்ரா, நேற்று மீண்டும் ஆஜரானார். சட்ட விரோத பணபரிமாற்றத்தில், ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சர்ச்சைக்குரிய, ஆயுத புரோக்கர், சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு குறித்தும், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பண்டாரியை யார் என்றே தெரியாது என, வதேரா பதில் அளித்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஏனெனில் சஞ்சய் பண்டாரிக்கும், ராபர்ட் வதேராவுக்கும் இடையிலான உறவு ஊரறிந்த விஷயம். இருவரும் இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். அதுதொடர்பான புகைப்படங்களும், செய்திகளும் பத்திரிகைகளில் வந்துள்ளன. இந்நிலையில் ராபர்ட் வதேரா துணிந்து பொய் சொல்வது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை  நான்காவது முறையாக அமலாக்கத்துறையினர் முன் ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close