பிரியங்கா ராபர்ட் வதேரா விரைவில் தமிழகம் வருகை

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 04:28 pm
priyanka-to-visit-tamilnadu-this-month

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா ராபர்ட் வதேரா தமிழகத்திற்கு விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இம்மாத இறுதியில் தமிழகம் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா ராபர்ட் வதேரா இதுவரைக்கும் தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்து வந்தார். இந்த நிலையில்  அவரை உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக, அவரது சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான ராகுல் காந்தி நியமனம் செய்தார். அதிகாரப்பூர்வமாக பிரியங்கா ராபர்ட் வதேரா கட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பது இதுவை முதல் முறையாகும்.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் பிரியங்கா ராபர்ட் வதேரா தமிழகம் வர வாய்ப்புள்ளதாகவும், திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close