10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன சிவன் சிலை!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:36 pm
lord-shiva-statue-sold-rs-10-lakhs

பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் என நூற்றுக்கணக்கான பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் கடவுள் சிவன் சிலை 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பளிப்பாக கிடைத்த பொருட்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதியை, கங்கை நதியின் தூய்மைப் பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 27, 28 -ஆம் தேதிகளில், அவரது நினைவுப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகள் ஏலம் விடப்பட்டன.

தொடர்ந்து அவை www.pmmomentos.gov.in என்ற இணையதளத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அவை ஏலம் விடப்பட்டு வந்தன. இந்த ஏலம் நேற்றிரவு நிறைவடைந்தது.

இதில், சிவன் சிலை 10 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. ஏலத்தில் இதன் அடிப்படை விலை ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 200 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது.

இதேபோன்று, மரத்தினாலான அசோகா ஸ்தூபியின் மாதிரி வடிவம், 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம்  எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை விலை ரூ.4,000-மாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, புத்தர் சிலை 7 லட்சம் ரூபாய்க்கும் ,நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுசில் கொய்ராலா, மோடிக்கு நினைவுப் பரிசாக அளித்த சிங்கம் உருவம் பொறித்த பித்தளை சிலை 5.2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளன.

மொத்தம் 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் இந்த ஏலத்தில் விற்பனையாகியுள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close