இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்டுள்ள அதிநவீன ஹெலிகாப்டர்கள் குஜராத் வந்தடைந்துள்ளன.
இந்திய விமானப்படைக்காக வாங்கப்பட்டுள்ள 4 ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தடைந்துள்ளது. சினூக் வகையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்களும் குஜராத்தில் உள்ள முந்த்ரா நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.
இந்திய விமானப்படைக்காக 5 ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து இந்திய வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹெலிகாப்டர்கள் நவீன வசதிகள் கொண்டது என்றும் 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்கள் எந்த விதமான வானிலையிலும் பறக்க கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in