ராஜஸ்தான்- குஜ்ஜார் வகுப்பினர் போராட்டத்தில் வன்முறை

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Feb, 2019 07:53 pm
rajasthan-clash-broke-out-between-police-and-protesters-at-dholpur-highway

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் வகுப்பின மக்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி குஜ்ஜார் வகுப்பினர் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தோல்பூர் நெடுஞ்சாலையை மறித்து அவர்கள் போராட்டம் நடத்திய போது, போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் 4 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். 

இதையடுத்து வன்முறையைக் கட்டுப்படுத்த வானை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close