மனிதாபிமானம் அற்றவர் ராகுல்: ஸ்மிருதி இரானி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 07:31 pm
union-minister-smriti-irani-hard-hitting-attack-on-rahul-gandhi-s-remark-on-air-force-pilots

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ராகுலின் சமீபத்திய பேச்சு, அவரது மோசமான மனநிலையையும், அவர் மனிதாபிமானம் அற்றவர் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சாடியுள்ளார்.

 ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியான கட்டுரையை ஆதரமாக கொண்டு, இதுகுறித்த தமது குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எழுப்பினார்.

இந்த முறை, ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை மீறி, பிரதமர் அலுவலகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ராகுல் புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

அத்துடன், இந்த முறைகேட்டின் மூலம் ரூ.30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு அளித்துள்ளார்  என மீண்டும் குற்றம்சாட்டிய ராகுல், இத்தொகையை போர் மற்றும் விமான விபத்துகளில் உயிரிழக்கும் இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

அவரது இக்கருத்தை சுட்டிகாட்டியுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி,  ஒருவரின் மரணத்தை பணம் கொடுத்து ஈடுசெய்துவிடலாம் என்பது போல் ராகுலின் பேச்சு உள்ளது.

இதன் மூலம் அவரது மோசமான மனநிலையும், அவர் மனிதாபிமானம் அற்றவர் என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close