3.79 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் - மத்திய அரசு பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 08:51 am
3-79-lakh-jobs-in-last-two-years

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அரசின் பல்வேறு துறைகளில் மட்டும் 3.79 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய புள்ளியியல் ஆணையம், வேலைவாய்ப்பு தொடர்பாக அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. அதில் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலையின்மை பெருகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஆதாரமாகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வேலைவாய்ப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 2017-18 ஆம் ஆண்டில் 2.51 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக, ரயில்வே துறையில் 99 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக,மத்திய கலால் துறையில் 79 ஆயிரம், நேரடி வரி விதிப்புத் துறையில் 29 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை 2018 -19 நிதியாண்டின் முடிவில் 3.79 லட்சமாக உயரும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close