டெல்லியில் முதல்வர் உண்ணாவிரதம்!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 10:45 am
ap-cm-chandra-babu-naidu-hunger-protest-in-delhi

ஆந்திரத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி, அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு,  டெல்லியில் உள்ள ஆந்திர இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்.

அவருடன் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோர்  கருப்பு நிற சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின்போது சந்திரபாபு பேசியது:
ஆந்திரத்தின் சுயமரியாதை மீது யார் தாக்குதல் நடத்தினாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். மாநிலத்தின் சுயமரியாதையை காக்கவே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

ஆந்திரத்துக்கு மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்தை அளிக்க வேண்டும்.இல்லையென்றால் அதனை எப்படி பெறுவதென்ற வழிமுறை எங்களுக்கு நன்றாக தெரியும்.

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரங்களின்போது, அந்த மாநில அரசு ராஜதர்மத்தை காக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விமர்சித்திருந்தார்.தற்போது  ஆந்திர மாநில விஷயத்திலும் மத்திய அரசு ராஜதர்மத்தை பின்பற்றவில்லை.

தனிமனிதர்களை தாக்கி பேசுவதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close