கர்நாடக அரசியல் கூத்துக்கள் டெல்லியிலும் அரங்கேறும்: மோடி எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 12:45 pm
karnataka-s-mazboor-model-was-being-sought-to-be-imposed-on-the-country-by-opposite-parties-pm-modi

மக்களவைத் தேர்தலில், மகா கூட்டணி எனச் சொல்லிக் கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தால், கர்நாடக அரசியலில் இன்று அரங்கேறிவரும் அரசியல் கூத்துக்கள் அனைத்தும் நாளை மத்திய ஆட்சியிலும் அரங்கேறும் அபாயம் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

இதுகுறித்து அவர், கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் நேற்றிரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மேலும் பேசியதாவது:

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் மதசார்பற்ற ஜனதாதளம் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தினம் தினம் ஒரு கூத்து அரங்கேறி வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஹோட்டல்களில் சண்டை போட்டு கொண்டு தங்கள் மண்டைகளை உடைத்து கொள்கின்றனர். மாநிலத்தின் சில காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் கட்சித் தலைமையுடன் மோத வேண்டிய நிலையில் உள்ளனர்.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் நிலையோ இன்னும் பரிதாபகரமாக உள்ளது. காங்கிரஸ் தயவில் ஆட்சியமைத்ததற்கு தண்டனையாக இன்று ஒவ்வொருவரிடமும் குத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் காங்கிரஸின் மிரட்டலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமது முதல்வர் பதவியை தக்கவைத்து கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக உள்ளது.

முதல்வருக்கான கண்ணியத்துடன் காங்கிரஸ் தன்னை நடத்தவில்லையென வெளிப்படையாக புலம்பும் அளவுக்கு அவரின் நிலை உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து மகா கூட்டணி அமைத்து, மத்தியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என கனவு காண்கின்றன. இந்த கனவு நிறைவேற வாய்ப்பில்லை. 

ஒருவேளை அப்படியொரு சூழல் ஏற்பட்டால், கர்நாடக அரசியலில் இன்று அரங்கேறிவரும் கூத்துக்கள் அனைத்தும் நாளை மத்திய ஆட்சியிலும் அரங்கேறும். இதற்கு நாட்டு மக்கள் துளிகூட இடம் தந்துவிடக் கூடாது என்று பிரதமர் மோடி கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close