பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்தில் உள்ள வளங்களை சுரண்டி அம்பானிக்கு கொடுத்து விட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2014 தேர்தலின் போது ஆந்திர மாநிலத்திற்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை வலியுறுத்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஆந்திர பவனிற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்,, பிரதமர் மோடி ஆந்திராவில் உள்ள வளங்களை சுரண்டி அம்பானிக்கு கொடுத்து விட்டதாகவும், ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை மத்திய அரசும், அம்பானியும் மறுத்து வருகின்றனர்.
மேலும் ஆந்திர மாநிலத்திற்கு வரும் பிரதமர் அங்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகவும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் அவர், அங்கும் இதே போல் வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
newstm.in