டுவிட்டரில் இணைந்தார் பிரியங்கா!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 02:22 pm

priyanka-joins-twiiter

காங்.,பொது செயலர் பிரியங்கா, டுவிட்டர் சமூக வலைதளத்தில் தன் கணக்கை துவங்கியுள்ளார். அவர் கணக்கு துவங்கிய, சில மணி நேரங்களில், ஆயிரக்கணக்கான காங்., தொண்டர்கள் டுவிட்டரில் அவரை பின் தொடர துவங்கியுள்ளனர். 

காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் மகளும், இந்நாள் தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்காவுக்கு, சமீபத்தில் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், உத்தர பிரதேசத்தில், மாயாவதி - அகிலேஷ் கூட்டணியை சமாளிக்கு வகையிலும், அந்த மாநில கிழக்கு பகுதி பொது செயலராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 

லக்னோவில் நேற்று பேரணியை துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன், அவர் டுவிட்டர் சமூக வலைதளத்தில் தன் கணக்கை துவக்கினார். அவர் கணக்கு துவங்கிய சில நிமிடங்களிலேயே, ஆயிரக்கணக்கானோர், அவரை பின் தொடர துவங்கியுள்ளனர். 

ஆனால் பிரியங்கா, காங்., தலைவர் ராகுல், இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தான் முதல்வர் கெலாட் உள்ளிட்ட ஏழு பேரை மட்டுமே டுவிட்டரில் பின் தொடர்கிறார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close