எல்லா விதத்திலும் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: தம்பிதுரை சாடல்

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 03:59 pm
bjp-government-in-central-has-failed-in-all-ways-thanbidurai

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, மேக் இன் இந்தியா திட்டம் என அனைத்து விதத்திலும் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என அதிமுக மூத்த தலைவரும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடினார்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்றது. அதில், அதிமுக சார்பில் தம்பிதுரை பேசியது:

மத்திய அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், பாஜகவின் தேர்தல் அறிக்கையாக தான் இருந்தது. தேர்தல் வரும் நேரத்தில் பட்ஜெட்டில் இவ்வளவு சலுகைகளை அறிவித்திருக்கக் கூடாது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டனவே தவிர, அதனால் என்ன பயன் கிடைத்ததென தெரியவில்லை.

ஜிஎஸ்டி வருவாயில் தங்களுக்கு சேர வேண்டிய பங்கை மாநில அரசுகள் மத்திய அரசிடம் கெஞ்சாத குறையாகத்தான் கேட்க வேண்டியுள்ளது. தமிழகத்துக்கு தரவேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னமும் அளிக்கவில்லை.

"மேக் இன் இந்தியா" திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினாலும், இன்றும் சீனப் பொருள்கள் இந்திய சந்தையில் வெகுதாராளமாய் கிடைத்து கொண்டுதான் உள்ளன.

மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளுக்கு எவ்வித வேறுபாடும் இல்லை என்று தம்பிதுரை பேசினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக -பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அக்கூட்டணிக்குள் ஆரம்பத்திலேயே குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தம்பிதுரை  இன்று நாடாளுமன்றத்தில் பேசிதாக தெரிகிறது.

"தம்பிதுரையின் கருத்துகள் எல்லாம் அதிமுகவின் கருத்து அல்ல" என்று, தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close