எரிசக்தி நுகர்வோர் சந்தை- 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Feb, 2019 03:07 pm
we-are-also-the-3rd-largest-energy-consumer-in-the-world-prime-minister

உலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். 70 நாடுகளை சேர்ந்த 7000 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாட்டில் தொடக்க உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது என்றும், 2014ல் இந்தியாவின் எரிசக்தி தேவை இருமடங்காகும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் எரிசக்தி தேவை எரிசக்தி நிறுவனங்களை கவரும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close