ஒரு லட்சம் பேருக்கு மேல் பின்தொடரும் ப்ரியங்கா காந்தியின் ட்விட்டர் கணக்கு!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 03:19 pm
priyanka-gandhi-logs-on-to-twitter-gets-over-75k-followers-without-posting-a-tweet

உத்திரப்பிரதேசம் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி இன்று ட்விட்டரில் இணைந்தார். அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கிய ஐந்து மணி நேரத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்ந்துள்ளனர். தற்போது ஒரு லட்ம் பேருக்கு மேல் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு முதன்முறையாக அரசியலில் இறங்கியுள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருவதையொட்டி, அவருக்கு உத்திரபிரதேச கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

— Congress (@INCIndia) February 11, 2019

உத்திரப்பிரதேசம் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்று நிலையில் அவர் சாலை வழியாக பிரச்சாரம் செய்தார். அவருக்கு தலைநகர் லக்னோவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் ராகுல் காந்தியும் சென்றார். 

இந்நிலையில், அவர் இன்று ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார். அவரை ட்விட்டர் பக்கத்தில் தொடரலாம் என்று காங்கிரஸ் கட்சி இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டது.

இதுவரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் எந்த ஒரு பதிவையும் இடவில்லை. ஆனால் அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கிய ஐந்து மணி நேரத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்ந்துள்ளனர். தற்போது தற்போது ஒரு லட்ம் பேருக்கு மேல் அவரை பின்தொடர்ந்த  நிலையில் விரைவில், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close