உத்தரப்பிரதேசம்- குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Feb, 2019 07:25 pm
pm-modi-serves-3-billionth-akshay-patra-meal-today-in-vrindavan

அக்‌ஷய பாத்திரம் திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியருக்கு இதுவரை இலவசமாக 300 கோடி பகல் உணவு அளிக்கப்பட்ட சாதனையை மோடி இன்று விருந்தாவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி உணவு பரிமாறி கொண்டாடினார். 

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் அக்‌ஷய பாத்திரம் என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவியர்களுக்கு இலவசமாக பகல் உணவு வழங்கி, நாட்டில் கல்வியறிவின் வளர்ச்சிக்காக சேவை புரிந்து வருகிறது.

பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகள் கல்வியின் மீது கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதற்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் பலகோடி மாணவ-மாணவியருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், 300-வது கோடி பயனாளிக்கு இன்று பகல் உணவு வழங்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் அங்கு மாணவ-மாணவியர்களுக்கு உணவு பரிமாறினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close