காஷ்மீர் புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சண்டை..! எல்லையில் பதற்றம்..!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 11:06 am

encounter-underway-between-militants-security-forces-in-j-k-s-pulwama

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நமது இந்திய ராணுவத்தினரும் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இன்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ரத்னிபோரா பகுதியில், தீவிரவாதிகள் நுழைந்ததாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் உள்நுழைந்து இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்புப்படையினரும், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

கடந்த பிப்ரவரி 10ம் தேதி அன்று குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதில் தாக்குதல் நடத்தவே தீவிரவாதிகள் உள்நுழைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close